Sekolah Jenis Kebangsaan (T) Ladang Ebor

Daripada Wikipedia, ensiklopedia bebas.
Sekolah Jenis Kebangsaan (T) Ladang Ebor
Lokasi
 Malaysia Batu Tiga, SHAH ALAM, Selangor
Malaysia
Maklumat
Jenis sekolahSekolah Jenis Kebangsaan, Sekolah kerajaan
MotoTekad Maju Jaya
Nombor sekolah017 581 4130
Kod sekolahBBD8461
Pengerusi PIBGEn. P.PANEER SELVAM
PengetuaPn. P.SIVAMALAR
GPK Pentadbiran dan AkademikPn.G. SATHIYAVANI
Penolong Kanan Hal Ehwal MuridEn. M.SELVAM
Penolong Kanan KokurikulumPn. D.Premela


Sekolah Jenis Kebangsaan (T) Ladang Ebor atau nama ringkasnya SJK (T) Ladang Ebor, merupakan sebuah Sekolah Jenis Kebangsaan yang terletak di Batu Tiga.

Pada 2017, Sekolah Jenis Kebangsaan (T) Ladang Ebor memiliki 40 pelajar lelaki dan 60 pelajar perempuan, menjadikan jumlah keseluruhan murid seramai 100 orang. Ia mempunyai seramai 13 orang guru.2009

Sejarah[sunting | sunting sumber]

சுமார் 117 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஈபோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி, ஆரம்ப வரலாறு காலத்தில் ஈபோர் தோட்டத்தில் தோற்றம் கண்டுள்ளது. 1905ஆம் தோட்டத்தில் இப்பள்ளி தோற்றுவிக்கப்பட்ட வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. ஏறக்குறைய ஆண்டு ஈபோர் 200 மாணவர்களைக் கொண்டு இப்பள்ளி பல காலம் இயங்கி வந்துள்ளது. கால போக்கில் இப்பகுதி மேம்பாட்டுத் நிட்டத்திற்கு உட்பட்ட தால், இத்தோட்டமும் மேம்பாட்டுத் திட்டத்தினால்' பாதிக்கப்பட்டது. எனவே, தோட்டத்திலுள்ள தொழிலாளர்கள் வேலை நிமித்தமாக வேறு இடங்களுக்குக் குடி பெயர்ந்தனர்.


தோட்ட வளாகம் முற்றிலும் காலி செய்யப்பட்டபின், தோட்டத்தில் இயங்கி வந்த ஈபோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியும் இட மாற்றத்திற்குள்ளானது 1994ஆம் ஆண்டு, சுமார் 28 மாணவர்களைக் கொண்டு தற்போது அமையப்பெற்றுள்ள பள்ளியின் வளாகத்தில் பள்ளி தோற்றுவிக்கப்பட்டது. புதிய இடத்தில் தோற்றுவிக்கப்பட்ட இப்பள்ளியில் மாணவர்களைச் சேர்க்கும் அரிய பணியினைப் பெற்றோர். ஆசிரியர் சங்கமும், பள்ளி வாரியமும் மேற்கொண்டது.


இப்பள்ளியின் அப்போதைய வாரியத் தலைவர் திரு பெரியசாமி அவர்கள், இப்பள்ளியின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணையாய் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கச் செய்தியாகும். போதிய மாணவர்கள் இல்லாத நிலையில், சுற்று வட்டாரத்திலுள்ள பெற்றோர்களை அணுகி பள்ளியில் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கும் சூழ்நிலையைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியம், தலைமையாசிரியர்,  ஆசிரியர்கள் ஆகியோர் ஏற்படுத்தினர். திருமதி மா.வத்சலா அவர்கள் இப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றிய காலத்தில், பள்ளியில் ஓரளவு உயர்ந்தது. பல மேம்பாடுகள் காணப்பட்டன. மாணவர்களின் எண்ணிக்கையும் ஓரளவு உயர்ந்தது.


பள்ளியில் மாணவர்களை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் வெற்றி கண்ட பள்ளி நிர்வாகம், பள்ளியில் போதிய வகுப்பறை வசதிகளையும் ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தி வந்தது.  அந்த வகையில், இப்பள்ளியில் ஓர் இணைக்கட்டடமும் எழுப்பப்பட்டது. பள்ளியில் போதிய வகுப்பறைப் பிரச்சனைகளையும் இதர பிரச்சனைகளையும் தீர்க்கும் வண்ணம் இணைக்கட்டடம் எழுந்த வேளையில் பள்ளியில் நேர்த்தியான ஒரு சிற்றுண்டிச்சாலையும் அமைக்கப்பட்டது.


அதன் பிறகு திரு.ஜோன் போஸ்கோ அவர்கள் இப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்று நமது ஈபோர் பள்ளியைச் சிறப்பாக வழி நடத்தினார். அதன் பிறகு தலைமையாசிரியராக திருமதி ந.சுப்பம்மா அவர்கள் பொறுப்பேற்றார். இவரது பணிக்காலத்தில் பள்ளியில் பல மாறுதல்களையும், ஏற்றங்களையும் கொண்டு வந்தார். பள்ளியில் கட்டட வளர்ச்சிகளுக்கும் பிற மாற்றங்களுக்கும் இவர் பள்ளியின் பெற்றோர். ஆசிரியர் சங்கம் மற்றும் வாரிய உறுப்பினர்களின் ஒத்துழைப்பை வெகுவாகப் பயன்படுத்திக் கொண்டார். காண்பதற்குச் சிறிய பள்ளியாக இருப்பினும் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கொண்டு அமைந்துள்ளது. இப்பள்ளியின் அனைத்து மேம்பாட்டிற்கும் பள்ளி வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் அரசாங்க சார்பற்ற இயக்கம் போன்றவை அரும்பாடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


117 வருடங்களைக் கடந்து விட்ட இப்பள்ளிக்கு 2012 ஆம் ஆண்டு "நியு டீல்" எனும் அங்கீகாரம் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடப்பட்டது. 2012 செப்டம்பர் முதல் திருமதி.ச.தெய்வமணி அவர்கள் பள்ளியின் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்று பள்ளியைச் சிறப்பாக வழி வழி நடத்தினார்.

பள்ளிப் பாடல்[sunting | sunting sumber]

ஒருநூற்றாண்டு நாம் கடந்தோம்

ஈபோர் தமிழ்ப்பள்ளியாய் வளர்ந்தோம்.

கல்வி ஒன்றே நிலை என்போம்

கற்றார் பெருக கடமை செய்வோம்

வாழ்க ! வாழ்க ! வாழ்க ! வாழ்க !

ஒழுக்கம் தூய்மை நாம் கொள்வோம்

ஒருமை கொண்டு நாம் வாழ்வோம்

கல்வியே நமது கண் என்போம்

கடமையே நமது உயிர் என்போம்


ஈபோர் தமிழ்ப்பள்ளி நமதென்போம்

இருவிழி தமிழ் என நாம் பயில்வோம்

என்றும் குருவின் வழிநடப்போம்

தாயாய் தந்தையாய் நாம் மதிப்போம்

வாழ்க ! வாழ்க ! வாழ்க ! வாழ்க

வீட்டின் நலமே நாம் பெறுவோம்

விரிந்த பல்லின நலம் காப்போம்.

தேசிய கோட்பாடு வழி செல்வோம்

உறுதி  உழைப்புடன் உயர்வடைவோம்!

Pencapaian[sunting | sunting sumber]

  • Berjaya mendapat anugerah Bai'ah pada tahun 2012
  • Pasukan Futsal S.J.K.(T) ladang Ebor menjuarai kejohanan Futsal Piala Wembley anjuran KPM tahun 2015. Pengurus Pasukan Futsal : M.Vikneswaran. Pemain Futsal sekolah R.Kumaran, M.Thasswhin, S.Risshihaeran, U.Naviinesh, R.Mahen,S.Thebaan.
Sekolah Jenis Kebangsaan (T) Ladang Ebor
Batu Tiga
Selangor, Malaysia
Telefon = 017 581 4130
Fax =

Pautan luar[sunting | sunting sumber]